குறள்: 877 88. பகைத்திறம் தெரிதல்

பொருட்பால்நட்பியல்

நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்கமென்மை பகைவர் அகத்து

மு. வரதராசனார் உரை

துன்புற்றதைத் தாமாகவே அறியாத நண்பர்க்குத் துன்பத்தைச் சொல்லக் கூடாது, பகைவரிடத்தில் மென்மை மேற்கொள்ளக் கூடாது.

சாலமன் பாப்பையா உரை

நம் பலம் இன்மையை, தாமாக அறியாத நண்பர்களிடம் சொல்ல வேண்டா; பகைவர்களிடமோ அதைக் காட்டிக் கொள்ளவோ வேண்டா.

மு. கருணாநிதி உரை

தனது துன்பத்தைப் பற்றி அதனை அறியாமல் இருக்கும் நண்பர்களிடம் சொல்லக்கூடாது தனது பலவீனத்தைப் பகைவரிடம் வெளிப்படுத்திவிடக் கூடாது

பகைத்திறம் தெரிதல் அதிகாரம் முழுவதும்