குறள்: 875 88. பகைத்திறம் தெரிதல்

பொருட்பால்நட்பியல்

தன்றுணை இன்றால் பகையிரண்டால் தானொருவன்இன்றுணையாக் கொள்கவற்றின் ஒன்று

மு. வரதராசனார் உரை

தனக்கு உதவியான துணையே இல்லை, பகையே இரண்டு, தானே ஒருவன் இந் நிலையில் அப் பகைகளில் ஒன்றை இனியத் துணையாகக் கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

தமக்கோ உதவும் நண்பர் இல்லை; தம்மைப் பகைப்பவரோ இருவர்; அப்போது தனியாக இருக்கும் ஆட்சியாளர், தம்மைப் பகைக்கும் இருவருள் ஒருவனை இனிய நட்பாக மாற்றிக் கொள்க.

மு. கருணாநிதி உரை

தனது பகைவர்கள் இரு பிரிவினராக இயங்கும் நிலையில் தனக்குத் துணையாக யாருமின்றித் தனியாக இருப்பவர், அந்தப் பகைவர்களில் ஒருவரைத் துணையாகக் கொள்ள வேண்டும்

பகைத்திறம் தெரிதல் அதிகாரம் முழுவதும்