குறள்: 881 89. உட்பகை
மு. வரதராசனார் உரை
இன்பம் தரும் நிழலும் நீரும் நோய் செய்வனவாக இருந்தால் தீயனவே ஆகும், அதுபோலவே சுற்றத்தாறின் தன்மைகளும் துன்பம் தருவானால் தீயனவே ஆகும்.
உள்ளத்தில் பகைகொண்டு புறத்தே உறவுகொள்வது உட்பகை எனப்படும். இது நம்பத்தக்கதாக இருந்துகொண்டு, பொருந்தியது போல் தோற்றம் தந்து, வெளிப்பட ஏதும் காட்டிக்கொள்ளாமல் காலம் வாய்த்தபோது அழிக்கும் கொடுமைக்குணம் கொண்டது. நட்பினருள் 'கூடாநட்பு' போன்றதே பகைவருள் இந்த உட்பகை. உட்பகையுடையான், நமக்கு என்றும் ஒத்திருந்து, முடிவில் நம்மையும் மேற்கொண்ட செயல்களையும் அழித்தொழிப்பான். அவ்விதம் பகைத்திருப்பார் செய்யும் திறம் கூறும் அதிகாரம் இது.
குறள்: 881 89. உட்பகை
இன்பம் தரும் நிழலும் நீரும் நோய் செய்வனவாக இருந்தால் தீயனவே ஆகும், அதுபோலவே சுற்றத்தாறின் தன்மைகளும் துன்பம் தருவானால் தீயனவே ஆகும்.
குறள்: 882 89. உட்பகை
வாளைப்போல் வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டியதில்லை, ஆனால் உறவினரைப் போல் இருந்து உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும்.
குறள்: 883 89. உட்பகை
உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும், தளர்ச்சி வந்த போது மட்கலத்தை அறுக்கும் கருவி போல் அந்த உட்பகை தவறாமல் அழிவு செய்யும்.
குறள்: 884 89. உட்பகை
மனம் திறந்தாத உட்பகை ஒருவனுக்கு உண்டாகுமானால், அது அவனுக்குச் சுற்றம் சிர்படாமைக்கு காரணமான குற்றம் பலவற்றைத் தரும்.
குறள்: 885 89. உட்பகை
உறவுமுறையோடு உட்பகை உண்டாகுமானால், அது ஒருவனுக்கு இறக்கும் வகையான துன்பம் பலவற்றையும் கொடுக்கும்.
குறள்: 886 89. உட்பகை
ஒருவனுடைய உற்றாரிடத்தில் பகைமை ஏற்படுமானால், அந்த உட்பகையால் அவன் அழியாமலிருத்தல் எப்போதும் அரிது.
குறள்: 887 89. உட்பகை
செப்பின் இணைப்பைப் போல புறத்தே பொருந்தி இருந்தாலும், உட்பகை உண்டான குடியில் உள்ளவர் அகத்தே பொருந்தி இருக்கமாட்டார்.
குறள்: 888 89. உட்பகை
உட்பகை உண்டான குடி அரத்தினால் தேய்க்கப் பட்ட இரும்பு போல் வலிமை குறைக்கப் பட்டு தேய்ந்து போகும்.
குறள்: 889 89. உட்பகை
எள்ளின் பிளவைப் போன்ற சிறிய அளவு உடையதே ஆனாலும், ஒரு குடியை அழிக்கவல்ல கேடு உட்பகையில் உள்ளதாகும்.
குறள்: 890 89. உட்பகை
அகத்தில் உடண்பாடு இல்லாதவருடன் குடிவாழும் வாழ்க்கை, ஒரு குடிசையிற் பாம்போடு உடன்வாழ்ந்தாற் போன்றது.