குறள்: 885 89. உட்பகை

பொருட்பால்நட்பியல்

உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்ஏதம் பலவும் தரும்

மு. வரதராசனார் உரை

உறவுமுறையோடு உட்பகை உண்டாகுமானால், அது ஒருவனுக்கு இறக்கும் வகையான துன்பம் பலவற்றையும் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை

உறவு முறையை உடையவனே ( சொந்தக் கட்சிக்காரனே) உட்பகையானால், அது சாவோடு கூடிய குற்றம் பலவற்றையும் உண்டாக்கும்.

மு. கருணாநிதி உரை

நெருங்கிய உறவினருக்கிடையே தோன்றும் உட்பகையானது அவர்களுக்குக் கேடு விளைவிக்கக் கூடிய பல துன்பங்களை உண்டாக்கும்

உட்பகை அதிகாரம் முழுவதும்