குறள்: 886 89. உட்பகை

பொருட்பால்நட்பியல்

ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்பொன்றாமை ஒன்றல் அரிது

மு. வரதராசனார் உரை

ஒருவனுடைய உற்றாரிடத்தில் பகைமை ஏற்படுமானால், அந்த உட்பகையால் அவன் அழியாமலிருத்தல் எப்போதும் அரிது.

சாலமன் பாப்பையா உரை

தன்னுடன் இருப்பவரின் பகை தோன்றுமானால், ஆட்சியின் அழிவைத் தடுக்க ஒருபோதும் முடியாது.

மு. கருணாநிதி உரை

ஒன்றி இருந்தவர்களிடையே உட்பகை தோன்றி விடுமானால், அதனால் ஏற்படும் அழிவைத் தடுப்பது என்பது எந்தக் காலத்திலும் அரிதான செயலாகும்

உட்பகை அதிகாரம் முழுவதும்