குறள்: 890 89. உட்பகை

பொருட்பால்நட்பியல்

உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருள்பாம்போ டுடனுறைந் தற்று

மு. வரதராசனார் உரை

அகத்தில் உடண்பாடு இல்லாதவருடன் குடிவாழும் வாழ்க்கை, ஒரு குடிசையிற் பாம்போடு உடன்வாழ்ந்தாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை

மனப்பொருத்தம் இல்லா‌தவரோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை, ஒரு குடிசைக்குள்ளே பாம்புடன் சேர்ந்து வாழ்வது போலாகும்.

மு. கருணாநிதி உரை

உள்ளத்தால் ஒன்றுபடாதவர்கள் கூடிவாழ்வது என்பது ஒரு சிறிய குடிலுக்குள் பாம்புடன் இருப்பது போன்று ஒவ்வொரு நொடியும் அச்சம் தருவதாகும்

உட்பகை அதிகாரம் முழுவதும்