குறள்: 895 90. பெரியாரைப் பிழையாமை

பொருட்பால்நட்பியல்

யாண்டுச்சென் றியாண்டும் உளராகார் வெந்துப்பின்வேந்து செறப்பட் டவர்

மு. வரதராசனார் உரை

மிக்க வலிமை உள்ள அரசனால் வெகுளப்பட்டவர், அவனிடமிருந்து தப்புவதற்க்காக எங்கே சென்றாலும் எங்கும் வாழ முடியாது.

சாலமன் பாப்பையா உரை

பகைவர்க்குக் கடும் வலிமை காட்டும் ஆட்சியாளரால் கோபிக்கப்பட்டவர், ஆட்சியாளருக்கு அஞ்சி, எங்கே போனாலும் எங்கும் வாழ முடியாது.

மு. கருணாநிதி உரை

மிக்க வலிமை பொருந்திய அரசின் கோபத்திற்கு ஆளானவர்கள் தப்பித்து எங்கே சென்றாலும் அங்கு அவர்களால் உயிர் வாழ முடியாது

பெரியாரைப் பிழையாமை அதிகாரம் முழுவதும்