குறள்: 896 90. பெரியாரைப் பிழையாமை

பொருட்பால்நட்பியல்

எரியாற் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்பெரியார்ப் பிழைத்தொழுகு வார்

மு. வரதராசனார் உரை

தீயால் சுடப்பட்டாலும் ஒருகால் உயிர் பிழைத்து வாழ முடியும், ஆற்றல் மிகுந்த பெரியவரிடத்தில் தவறு செய்து நடப்பவர் தப்பி பிழைக்க முடியாது.

சாலமன் பாப்பையா உரை

தீயால் சுடப்பட்டாலும் பிழைத்துக் கொள்ளலாம். ஆனால் பெரியவர்களை அவமதித்து வாழ்பவர் பிழைக்கவேமாட்டார்.

மு. கருணாநிதி உரை

நெருப்புச் சூழ்ந்து சுட்டாலும்கூட ஒருவர் பிழைத்துக் கொள்ள முடியும்; ஆனால் ஆற்றல் மிகுந்த பெரியோரிடம் தவறிழைப்போர் தப்பிப் பிழைப்பது முடியாது

பெரியாரைப் பிழையாமை அதிகாரம் முழுவதும்