குறள்: 899 90. பெரியாரைப் பிழையாமை
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்துவேந்தனும் வேந்து கெடும்
மு. வரதராசனார் உரை
உயர்ந்த கொள்கையுடைய பெரியவர் சீறினால் நாட்டை ஆளும் அரசனும் இடை நடுவே முறிந்து அரசு இழந்து கெடுவான்.
சாலமன் பாப்பையா உரை
உயர்ந்த கொள்கையை உடைய பெரியோர் சினம் கொள்வார் என்றால், ஆட்சியாளனும்கூடத் தன் பதவியை இடையிலேயே இழந்து கெடுவான்.
மு. கருணாநிதி உரை
உயர்ந்த கொள்கை உறுதி கொடண்வர்கள் சீறி எழுந்தால், அடக்குமுறை ஆட்சி நிலை குலைந்து அழிந்துவிடும்