குறள்: 900 90. பெரியாரைப் பிழையாமை

பொருட்பால்நட்பியல்

இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்சிறந்தமைந்த சீரார் செறின்

மு. வரதராசனார் உரை

மிகச் சிறப்பாக அமைந்த பெருமையுடையவர் வெகுண்டால் அளவு கடந்து அமைந்துள்ள சார்புகள் உடையவரானாலும் தப்பி பிழைக்க முடியாது.

சாலமன் பாப்பையா உரை

மிகச் சிறந்த சீர்களை உடையவர் சினந்தால் மிகப்பெரும் பலங்களைச் சார்வாக உடையவரே என்றாலும் தப்பமாட்டார்.

மு. கருணாநிதி உரை

என்னதான் எல்லையற்ற வசதிவாய்ப்புகள், வலிமையான துணைகள் உடையவராக இருப்பினும், தகுதியிற் சிறந்த சான்றோரின் சினத்தை எதிர்த்துத் தப்பிப் பிழைக்க முடியாது

பெரியாரைப் பிழையாமை அதிகாரம் முழுவதும்