குறள்: 904 91. பெண்வழிச் சேறல்

பொருட்பால்நட்பியல்

மனையாளை யஞ்சும் மறுமையி லாளன்வினையாண்மை வீறெய்த லின்று

மு. வரதராசனார் உரை

மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாத ஒருவன், செயல் ஆற்றுந்தன்மை பெருமை பெற்று விளங்க முடிவதில்லை.

சாலமன் பாப்பையா உரை

தன் மனைவிக்குப் பயந்து நடக்கும் மறுமைப் பயன் இல்லாதவனின் செயல்திறம் நல்லவரால் பாராட்டப்படாது.

மு. கருணாநிதி உரை

மணம் புரிந்து புதுவாழ்வின் பயனை அடையாமல் குடும்பம் நடத்த அஞ்சுகின்றவனின் செயலாற்றல் சிறப்பாக அமைவதில்லை

பெண்வழிச் சேறல் அதிகாரம் முழுவதும்