குறள்: 908 91. பெண்வழிச் சேறல்

பொருட்பால்நட்பியல்

நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்பெட்டாங் கொழுகு பவர்

மு. வரதராசனார் உரை

மனைவி விரும்பியபடி செய்து நடப்பவர், தமது நண்பர்க்கு உற்ற குறையையும் செய்து முடிக்க மாட்டார், அறத்தையும் செய்ய மாட்டார்.

சாலமன் பாப்பையா உரை

தம் மனைவி விரும்பியபடியே வாழ்பவர், தம் நண்பர்க்கு ஏற்பட்ட குறையைப் போக்கமாட்டார் நல்லதும் செய்யமாட்டார்.

மு. கருணாநிதி உரை

ஒரு பெண்ணின் அழகுக்காகவே அவளிடம் மயங்கி அறிவிழந்து நடப்பவர்கள், நண்பர்களைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள்; நற்பணிகளையும் ஆற்றிட மாட்டார்கள்

பெண்வழிச் சேறல் அதிகாரம் முழுவதும்