குறள்: 909 91. பெண்வழிச் சேறல்

பொருட்பால்நட்பியல்

அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்பெண்ணேவல் செய்வார்கண் இல்

மு. வரதராசனார் உரை

அறச் செயலும் அதற்க்கு காரணமாக அமைந்த பொருள் முயற்சியும், மற்றக் கடமைகளும் மனைவியின் ஏவலைச் செய்வோரிடத்தில் இல்லை.

சாலமன் பாப்பையா உரை

அறச்செயலும் சிறந்த பொருட்செயலும், பிற இன்பச் செயல்களும் மனைவி சொல்லைக் கேட்டுச் செய்பவரிடம் இருக்கமாட்டா.

மு. கருணாநிதி உரை

ஆணவங்கொண்ட பெண்கள் இடுகின்ற ஆணைகளுக்கு அடங்கி இயங்குகின்ற பெண்பித்தர்களிடம் அறநெறிச் செயல்களையோ சிறந்த அறிவாற்றலையோ எதிர்பார்க்க முடியாது

பெண்வழிச் சேறல் அதிகாரம் முழுவதும்