குறள்: 91 10. இனியவை கூறல்

அறத்துப்பால்இல்லறவியல்

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்

மு. வரதராசனார் உரை

அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.

சாலமன் பாப்பையா உரை

அறம் அறிந்தவர் வாயிலிருந்து பிறந்து, அன்பு கலந்து உள்நோக்கம் இல்லாது வருவதே இனிய சொல்.

மு. கருணாநிதி உரை

ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்

இனியவை கூறல் அதிகாரம் முழுவதும்