குறள்: 92 10. இனியவை கூறல்

அறத்துப்பால்இல்லறவியல்

அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்துஇன்சொலன் ஆகப் பெறின்

மு. வரதராசனார் உரை

முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.

சாலமன் பாப்பையா உரை

முகத்தால் விரும்பி, இனிய சொற்களைக் கூறுகிறவனாகவும் ஆகிவிட்டால், உள்ளம் மகிழ்ந்து பொருளைக் கொடுப்பதைக் காட்டிலும் அது நல்லது

மு. கருணாநிதி உரை

முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, அகம் குளிர்ந்து ஒன்றைக் கொடுப்பதை விட மேலான பண்பாகும்

இனியவை கூறல் அதிகாரம் முழுவதும்