குறள்: 912 92. வரைவின் மகளிர்

பொருட்பால்நட்பியல்

பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்நயன்தூக்கி நள்ளா விடல்

மு. வரதராசனார் உரை

கிடைக்க கூடிய பயனை அளந்து பார்த்து, அதற்கு ஏற்றவாறு இனிய சொல் கூறுகின்ற பண்பற்ற பொது மகளிரின் இன்பத்தை ஆராய்ந்து பொருந்தாமல் விட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

ஒருவனிடம் உள்ள செல்வத்தை அடையும்வரை நல்லவராய்ப் பேசும், பண்பு இல்லாத பாலியல் தொழிலாளரின் ஒழுக்கத்தை நன்கு எண்ணி, அவரைச் சேராது விடுக.

மு. கருணாநிதி உரை

ஆதாயத்தைக் கணக்கிட்டு அதற்கேற்றவாறு பாகுமொழிபேசும் பொதுமகளிர் உறவை ஒருபோதும் நம்பி ஏமாறக்கூடாது

வரைவின் மகளிர் அதிகாரம் முழுவதும்