குறள்: 913 92. வரைவின் மகளிர்
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்ஏதில் பிணந்தழீஇ அற்று
மு. வரதராசனார் உரை
பொருளையே விரும்பும் பொது மகளிரின் பொய்யானத் தழுவல், இருட்டறையில் தொடர்பில்லாத ஒரு பிணத்தைத் தழுவினாற் போன்றது.
சாலமன் பாப்பையா உரை
பொருளையே விரும்பும் பாலியல் தொழிலாளரின் போலித் தழுவல், இருட்டு அறையில் முன்பு அழியாத பிணத்தைத் தழுவுவது போலாம்.
மு. கருணாநிதி உரை
விலைமாதர்கள் பணத்துக்காக மட்டுமே ஒருவரைத் தழுவிப் பொய்யன்பு காட்டி நடிப்பது, இருட்டறையில் ஓர் அந்நியப் பிணத்தை அணைத்துக் கிடப்பது போன்றதாகும்