குறள்: 916 92. வரைவின் மகளிர்

பொருட்பால்நட்பியல்

தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்புன்னலம் பாரிப்பார் தோள்

மு. வரதராசனார் உரை

அழகு முதலியவற்றால் செருக்கு கொண்டு தம் புன்மையான நலத்தை விற்கும் பொது மகளிரின் தோளை, தம் நல்லோழுக்கத்தைப் போற்றும் சான்றோர் பொருந்தார்.

சாலமன் பாப்பையா உரை

தம் திறமையில் செருக்குக் கொண்டு, தம் உடல் அழகைப் பலருக்கும் தந்து பணம் பெற விரும்பும் பாலிய தொழிலாளரின் தோளை, அறிவினால் தம் புகழைப் பரப்ப விரும்பும் பெரியோர் தீண்டமாட்டார்.

மு. கருணாநிதி உரை

புகழ்ச்சிக்குரிய சான்றோர் எவரும், இகழ்ச்சிக்குரிய இன்பவல்லிகளின் தோளில் சாய்ந்து கிடக்க மாட்டார்

வரைவின் மகளிர் அதிகாரம் முழுவதும்