குறள்: 917 92. வரைவின் மகளிர்

பொருட்பால்நட்பியல்

நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சிற்பேணிப் புணர்பவர் தோள்

மு. வரதராசனார் உரை

நெஞ்சத்தை நிறுத்தி ஆளும் ஆற்றல் இல்லாதவர், தம் நெஞ்சில் வேறுபொருளை விரும்பிக்கூடும் போது மகளிரின் தோளைப் பொருந்துவர்.

சாலமன் பாப்பையா உரை

பிறவற்றைப் பெறும் பொருட்டு மன ஆசை கொண்டு, அதற்காகவே உடம்பால் புணரும் பாலியல் தொழிலாளரின் தோளை மன அடக்கம் இல்லாதவரே தீண்டுவர்.

மு. கருணாநிதி உரை

உள்ளத்தில் அன்பு இல்லாமல் தன்னலத்துக்காக உடலுறவு கொள்ளும் பொதுமகளிர் தோளை, உறுதியற்ற மனம் படைத்தோர் மட்டும் நம்பிக் கிடப்பர்

வரைவின் மகளிர் அதிகாரம் முழுவதும்