குறள்: 938 94. சூது

பொருட்பால்நட்பியல்

பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்தல்லல் உழப்பிக்கும் சூது

மு. வரதராசனார் உரை

சூது உள்ள பொருளை அழித்துப் பொய்யை மேற்கொள்ளச் செய்து அருளையும் கெடுத்துப் பலவகையிலும் துன்பமுற்று வருந்தச் செய்யும்.

சாலமன் பாப்பையா உரை

சூதாட்டம் பொருளை அழிக்கும். பொய்யைச் சொல்லச் செய்யும்; மன இரக்கத்தைக் கெடுக்கும்; துன்பத்தையும் தரும்.

மு. கருணாநிதி உரை

பொருளைப் பறித்துப் பொய்யனாக ஆக்கி, அருள் நெஞ்சத்தையும் மாற்றித், துன்ப இருளில் ஒருவனை உழலச் செய்வது சூது

சூது அதிகாரம் முழுவதும்