குறள்: 939 94. சூது

பொருட்பால்நட்பியல்

உடைசெல்வம் ஊணொளி கல்வியென் றைந்தும்அடையாவாம் ஆயங் கொளின்

மு. வரதராசனார் உரை

சூதாடுதலை ஒருவன் மேற்கொண்டால், புகழ், கல்வி, செல்வம், உணவு, உடை ஆகிய ஐந்தும் அவனைச் சேராமல் ஒதுங்கும்.

சாலமன் பாப்பையா உரை

சூதாட்டத்தை விரும்பினால் மரியாதை, கல்வி, செல்வம், உணவு, உடை என்ற ஐந்தும் சேரமாட்டா.

மு. கருணாநிதி உரை

சூதாட்டத்திற்கு அடிமையாகி விட்டவர்களை விட்டுப் புகழும், கல்வியும், செல்வமும், உணவும், உடையும் அகன்று ஒதுங்கி விடும்

சூது அதிகாரம் முழுவதும்