குறள்: 942 95. மருந்து

பொருட்பால்நட்பியல்

மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்தியதற்றது போற்றி உணின்

மு. வரதராசனார் உரை

முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.

சாலமன் பாப்பையா உரை

ஒருவன் முதலில் உண்டது சீரணமாகிவிட்டதை நன்கு அறிந்து அதன் பிறகு உண்டால், அவன் உடம்புக்க மருந்து என்று ஒன்று வேண்டியது இல்லை.

மு. கருணாநிதி உரை

உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை

மருந்து அதிகாரம் முழுவதும்