குறள்: 944 95. மருந்து

பொருட்பால்நட்பியல்

அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்லதுய்க்க துவரப் பசித்து

மு. வரதராசனார் உரை

முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து அவற்றையும் பசித்த பிறகு உண்ண வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

முன்பு உண்டது சீரணமாகிவிட்டதை அறிந்து நன்கு பசிக்கும்போது உடம்பிற்கும் காலத்திற்கும் ஒவ்வாத உணவினை விலக்கி, வேண்டியவற்றை உண்க.

மு. கருணாநிதி உரை

உண்டது செரித்ததா என்பதை உணர்ந்து, நன்கு பசியெடுத்த பிறகு உடலுக்கு ஒத்து வரக்கூடிய உணவை அருந்த வேண்டும்

மருந்து அதிகாரம் முழுவதும்