குறள்: 946 95. மருந்து

பொருட்பால்நட்பியல்

இழிவறிந் துண்பான்கண் இன்பம்போல் நிற்கும்கழிபேர் இரையான்கண் நோய்

மு. வரதராசனார் உரை

குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலைநிற்பது போல, மிகப்பெரிதும் உண்பவனிடத்தில் நோய் நிற்க்கும்.

சாலமன் பாப்பையா உரை

குறைவாக உண்பதே நல்லது என்று அறிந்து உண்பவனிடம் இன்பம் விலகாமல் இருப்பது போல் மிக அதிகமாக விழுங்குபவனிடம் நோய் விலகாமல் இருக்கும்.

மு. கருணாநிதி உரை

அளவோடு உண்பவர் உடல் நலமுடன் வாழ்வதும் அதிகம் உண்பவர் நோய்க்கு ஆளாவதம் இயற்கை

மருந்து அதிகாரம் முழுவதும்