குறள்: 952 96. குடிமை
ஒழுக்கமும் வாய்மையும் நாணுமிம் மூன்றும்இழுக்கார் குடிப்பிறந் தார்
மு. வரதராசனார் உரை
உயர் குடியில் பிறந்தவர் ஒழுக்கமும் வாய்மையும் நாணமும் ஆகிய இம் மூன்றிலிருந்தும் வழுவாமல் இயல்பாகவே நன்னெறியில் வாழ்வர்.
சாலமன் பாப்பையா உரை
நல்ல குடும்பத்தில் பிறந்தவர் ஒழுக்கம், உண்மை, நாணம் என்னும் இம்மூன்றிலிருந்தும் விலகமாட்டார்.
மு. கருணாநிதி உரை
ஒழுக்கம், வாய்மை, மானம் ஆகிய இந்த மூன்றிலும் நிலைதவறி நடக்காதவர்களே உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருதப்படுவார்கள்