குறள்: 960 96. குடிமை

பொருட்பால்குடியியல்

நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்வேண்டுக யார்க்கும் பணிவு

மு. வரதராசனார் உரை

ஒருவனுக்கு நன்மை வேண்டுமானால் நாணம் உடையவனாக வேண்டும், குடியின் உயர்வு வேண்டுமானால் எல்லோரிடத்தும் பணிவு வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

ஒருவன் தனக்கு நன்மை வேண்டும் என்று எண்ணினால் அவனிடம் நாணம் இருக்க வேண்டும். நற்குடும்பத்தவன் என்ற பெயர் வேண்டும் என்றால், எல்லாரிடமும் பணிவு இருக்க வேண்டும்.

மு. கருணாநிதி உரை

தகாத செயல் புரிந்திட அஞ்சி நாணுவதும், எல்லோரிடமும் ஆணவமின்றிப் பணிவுடன் நடந்து கொள்வதும் ஒருவரின் நலத்தையும் அவர் பிறந்த குலத்தையும் உயர்த்தக் கூடியவைகளாகும்

குடிமை அதிகாரம் முழுவதும்