குறள்: 965 97. மானம்

பொருட்பால்குடியியல்

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவகுன்றி அனைய செயின்

மு. வரதராசனார் உரை

மலை போல் உயர்ந்த நிலையில் உள்ளவரும், தாழ்வுக்கு காரணமானச் செயல்களை ஒரு குன்றிமனி அளவு செய்தாலும் தாழ்ந்து போய் விடுவர்.

சாலமன் பாப்பையா உரை

நல்ல குடும்பத்தில் பிறந்து மலைபோல உயர்ந்தவரும்கூட தாழ்வானவற்றை ஒரு குன்றிமணி அளவு செய்தாலும் தாழ்ந்து போவார்.

மு. கருணாநிதி உரை

குன்றினைப் போல் உயர்ந்து கம்பீரமாக நிற்பவர்களும் ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில் ஈடுபட்டால் தாழ்ந்து குன்றிப் போய் விடுவார்கள்

மானம் அதிகாரம் முழுவதும்