குறள்: 967 97. மானம்
ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையேகெட்டான் எனப்படுதல் நன்று
மு. வரதராசனார் உரை
மதியாதவரின் பின் சென்று ஒருவன் உயிர்வாழ்வதை விட, அவ்வாறு செய்யாத நிலையில் நின்று அழிந்தான் என்று சொல்லப்படுதல் நல்லது.
சாலமன் பாப்பையா உரை
இகழுபவர் பின்னே சென்று அவர் தரும் பொருளை, பதவியைப் பெற்று உயிர்வாழ்வதைக் காட்டிலும் அவன் இறந்துபோனான் என்று சொல்லப்படுவது அவனுக்கு நல்லதாம்.
மு. கருணாநிதி உரை
தன்னை மதிக்காதவரின் பின்னால் சென்று உயிர் வாழ்வதைவிடச் செத்தொழிவது எவ்வளவோ மேல்