குறள்: 971 98. பெருமை

பொருட்பால்குடியியல்

ஒளியொருவற் குள்ள வெறுக்கை இளியொருவற்கஃதிறந்து வாழ்தும் எனல்

மு. வரதராசனார் உரை

ஒருவனுக்கு ஒளி ஊக்கமிகுதியே ஆகும், ஒருவனுக்கு இழிவு அந்த ஊக்கம் இல்லாமலேயே உயிர்வாழலாம் என்று எண்ணுதலாம்.

சாலமன் பாப்பையா உரை

ஒருவனுக்குப் பெருமை, பிறர் செய்ய முடியாத நல்ல செய்வேன் என்று எண்ணும் மன ஊக்கமே; அவ்வூக்கம் இல்லாமல் வாழ்வேன் என்று எண்ணுவது கேவலமே.

மு. கருணாநிதி உரை

ஒருவரின் வாழ்க்கைக்கு ஒளிதருவது ஊக்கமேயாகும் ஊக்கமின்றி உயிர்வாழ்வது இழிவு தருவதாகும்

பெருமை அதிகாரம் முழுவதும்