குறள்: 980 98. பெருமை

பொருட்பால்குடியியல்

அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்குற்றமே கூறி விடும்

மு. வரதராசனார் உரை

பெருமைப் பண்பு பிறருடைய குறைப்பாட்டை மறைக்கும், சிறுமையோ பிறருடைய குற்றத்தையே எடுத்துச் சொல்லிவிடும்

சாலமன் பாப்பையா உரை

பெருமைக்குரியவர் பிறர் பெருமைகளைச் சொல்லி அவர் குறைகளைக் கூறாமல் மறைத்து விடுவர்; சிறுமைக்கு உரியவர்‌களோ பிறர் பெருமைகளை மறைத்துக் குறைகளை மட்டுமே கூறிவிடுவர்.

மு. கருணாநிதி உரை

பிறருடைய குறைகளை மறைப்பது பெருமைப் பண்பாகும் பிறருடைய குற்றங்களையே கூறிக்கொண்டிருப்பது சிறுமைக் குணமாகும்

பெருமை அதிகாரம் முழுவதும்