குறள்: 982 99. சான்றாண்மை
குணநலஞ் சான்றோர் நலனே பிறநலம்எந்நலத் துள்ளதூஉ மன்று
மு. வரதராசனார் உரை
சான்றோரின் நலம் என்று கூறப்படுவது அவறுடைய பண்புகளின் நலமே, மற்ற நலம் வேறு எந்த நலத்திலும் சேர்ந்துள்ளதும் அன்று.
சாலமன் பாப்பையா உரை
சான்றோர் என்பவர்க்கு அழகு, குறங்களால் ஆகிய அழகே; பிற புற அழகெல்லாம் எந்த அழகிலும் சேரா.
மு. கருணாநிதி உரை
நற்பண்பு ஒன்றே சான்றோர்க்கான அழகாகும் வேறு எந்த அழகும் அழகல்ல