குறள்: 981 99. சான்றாண்மை
மு. வரதராசனார் உரை
கடமை இவை என்று அறிந்து சான்றான்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்லவை எல்லாம் இயல்பான கடமை என்று கூறுவர்.
சான்றாண்மை என்பது 'சான்று+ஆண்மை' என விரியும், சான்று என்பது நிறைந்து (சாலுதல்-நிறைதல்) எனப்பொருள்படும். இதைப் பல நற்குணங்களாலும் நிறைந்து என விளக்குவர். ஆண்மை என்ற சொல் அக்குணங்களை ஆளும் தன்மையைக் குறிக்கும். பல நல்ல குணங்களாலும் நிறையப் பெற்று அவற்றை ஆளும் தன்மையைக் குறிப்பது சான்றாண்மை. நற்குணங்களால் நிரம்பப் பெற்றோர் சான்றோராவர். எவை எவை நல்லவையோ அவற்றையெல்லாம் இவர்கள் தங்கள் கடமையாகக் கொள்வர். மிகவும் உயர்வான இடத்தை அடைந்த இவர்கள் ஒளிறும் வாழ்க்கைநிலையுடையவர்கள். ஊழிக்காலம் போன்ற நிலை வந்தாலும் தங்கள் பண்புநலன்களிலிருந்து விலகமாட்டார்கள். இவர்களது துணையுடன்தான் பூமி தன் பாரத்தைத் தாங்குகிறது. வள்ளுவரின் இலக்கியலான நிறைமாந்தர் இவர்களே. மாந்தர் நல்வழிப்பட்டு மேம்பாடெய்தற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வழிகாட்டும் பெரியோர்களின் சிறப்பு இயல்புகளை ‘சான்றாண்மை' அதிகாரம் கூறுகிறது.
குறள்: 981 99. சான்றாண்மை
கடமை இவை என்று அறிந்து சான்றான்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்லவை எல்லாம் இயல்பான கடமை என்று கூறுவர்.
குறள்: 982 99. சான்றாண்மை
சான்றோரின் நலம் என்று கூறப்படுவது அவறுடைய பண்புகளின் நலமே, மற்ற நலம் வேறு எந்த நலத்திலும் சேர்ந்துள்ளதும் அன்று.
குறள்: 983 99. சான்றாண்மை
அன்பு, நாணம்,ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை, என்னும் ஐந்து பண்புகளும், சால்பு என்பதைத் தாங்கியுள்ள தூண்களாகும்.
குறள்: 984 99. சான்றாண்மை
தவம் ஓர் உயிரையும் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது, சால்பு பிறருடையத் தீமையை எடுத்துச் சொல்லாத நற்பண்பை அடிப்படையாகக் கொண்டது.
குறள்: 985 99. சான்றாண்மை
ஆற்றலுடையவரின் ஆற்றலாவது பணிவுடன் நடத்தலாகும், அது சான்றோர் தம் பகைவரைப் பகைமையிலிருந்து மாற்றுகின்ற கருவியாகும்.
குறள்: 986 99. சான்றாண்மை
சால்புக்கு உரைகல் போல் மதிப்பிடும் கருவி எது என்றால் தமக்கு ஒப்பில்லாத தாழ்ந்தோரிடத்திலும்தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பண்பாகும்.
குறள்: 987 99. சான்றாண்மை
துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய உதவிகளைச் செய்யா விட்டால், சான்றோரின் சால்பு என்ன பயன் உடையதாகும்.
குறள்: 988 99. சான்றாண்மை
சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப் பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று.
குறள்: 989 99. சான்றாண்மை
சால்பு என்னும் தன்மைக்குக் கடல் என்று புகழப்படுகின்றவர், ஊழிக்காலத்தின் வேறுபாடுகளே நேர்ந்தாலும் தாம் வேறுபடாமல் இருப்பர்.
குறள்: 990 99. சான்றாண்மை
சான்றோரின் சால்பு நிறைந்த பண்பு குறைபடுமானால் இந்தப் பெரிய நிலவுலகமும் தன் பாரத்தைத் தாங்க முடியாமற் போய் விடும்.