100. பண்புடைமை

இவ்வதிகாரத்தில் சொல்லப்படும் பண்புடைமை யாவரிடமும் எளியனாய்‌ கலந்து ஒழுகுதலைக் குறிப்பது. அன்புள்ளம் கொண்டவராயும் நல்ல குடும்பத்துள்ளோரது குணமுடையவராயும் இருப்பவர்க்கு பண்புள்ளவராக அளவளாவுதல் இயல்பாக அமையும். உலகோருடன் ஊடாடும்போது பண்பு வெளிப்படுமாதலின், பழகும் பண்பாட்டை விளக்குவதாகவும் இவ்வதிகாரம் உள்ளது. பண்புள்ளவர் பிறருக்கும் உதவும் குணம் கொண்டவராயிருப்பார். பண்புடையார் இருப்பதாலேயே இவ்வுலகம் மறையாமல் உள்ளது.