குறள்: 994 100. பண்புடைமை

பொருட்பால்குடியியல்

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்பண்புள ராட்டும் உலகு

மு. வரதராசனார் உரை

நீதியையும் நன்மையையும் விரும்பிப் பிறர்க்குப் பயன்பட வாழும் பெரியோரின் நல்லப் பண்பை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர்.

சாலமன் பாப்பையா உரை

நீதியையும் அறத்தையும் விரும்பிப் பிறர்க்கும் பயன்படுபவரின் பண்பினை உலகத்தவர் சிறப்பித்துப் பேசுவர்.

மு. கருணாநிதி உரை

நீதி வழுவாமல் நன்மைகளைச் செய்து பிறருக்குப் பயன்படப் பணியாற்றுகிறவர்களின் நல்ல பண்பை உலகம் பாராட்டும்

பண்புடைமை அதிகாரம் முழுவதும்