குறள்: 997 100. பண்புடைமை

பொருட்பால்குடியியல்

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்மக்கட்பண் பில்லா தவர்

மு. வரதராசனார் உரை

மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர் அரம் போல் கூர்மையான அறிவுடையவரானாலும், ஓரறிவுயிராகிய மரத்தைப் போன்றவரே ஆவர்.

சாலமன் பாப்பையா உரை

மனிதப்பண்பு இல்லாதவர்கள் அரம் போல அறிவுக்கூர்மை படைத்தவர் என்றாலும் ஓர் அறிவு படைத்த மரத்தைப் போன்றோரே.

மு. கருணாநிதி உரை

அரம் போன்ற கூர்மையான அறிவுடைய மேதையாக இருந்தாலும், மக்களுக்குரிய பண்பு இல்லாதவர் மரத்துக்கு ஒப்பானவரேயாவார்

பண்புடைமை அதிகாரம் முழுவதும்