குறள்: 988 99. சான்றாண்மை

பொருட்பால்குடியியல்

இன்மை ஒருவற் கிளிவன்று சால்பென்னும்திண்மையுண் டாகப் பெறின்

மு. வரதராசனார் உரை

சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப் பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று.

சாலமன் பாப்பையா உரை

சான்றாண்மை எனப்படும் மன ஆற்றல் மட்டும் ஒருவனிடம் இருந்து விடுமானால், வறுமை அவனுக்கு இழிவு ஆகாது.

மு. கருணாநிதி உரை

சால்பு என்கிற உறுதியைச் செல்வமெனக் கொண்டவருக்கு வறுமை என்பது இழிவு தரக் கூடியதல்ல

சான்றாண்மை அதிகாரம் முழுவதும்