குறள்: 1021 103. குடிசெயல் வகை

பொருட்பால்குடியியல்

கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும்பெருமையிற் பீடுடைய தில்

மு. வரதராசனார் உரை

குடிப் பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன் முயலும் பெருமையைப் போல மேம்பாடானது வேறொன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை

வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செயல் செய்யாமல் விடமாட்டேன் என மன உறுதிகொள்ளும் பெருமையைக் காட்டிலும் மேலான பெருமை வேறு இல்லை.

மு. கருணாநிதி உரை

உரிய கடமையைச் செய்வதில் சோர்வு காணாமல் எவனொருவன் முயற்சிகளை விடாமல் மேற்கொள்கிறானோ அந்தப் பெருமைக்கு மேலாக வேறொரு பெருமை கிடையாது

குடிசெயல் வகை அதிகாரம் முழுவதும்