குறள்: 1065 107. இரவச்சம்

பொருட்பால்குடியியல்

தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்ததுண்ணலின் ஊங்கினிய தில்

மு. வரதராசனார் உரை

தெளிந்த நீர் போல் சமைத்த கூழே ஆனாலும், முயற்சியால் கிடைத்ததை உண்பதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை

நீரே மிகுதியாக இருக்கச் சமைக்கப்பட்ட கஞ்சியே என்றாலும், உழைத்த வரவில் உண்பதைக் காட்டிலும் மேலான மகிழ்ச்சி இல்லை.

மு. கருணாநிதி உரை

கூழ்தான் குடிக்கவேண்டிய நிலை என்றாலும், அதையும் தானே உழைத்துச் சம்பாதித்துக் குடித்தால் அதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை

இரவச்சம் அதிகாரம் முழுவதும்