குறள்: 1066 107. இரவச்சம்

பொருட்பால்குடியியல்

ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற்கிரவின் இளிவந்த தில்

மு. வரதராசனார் உரை

பசுவிற்கு நீர் வேண்டும் என்று அறம் நோக்கி இரந்து கேட்டாலும், இர த்தலை விட நாவிற்கு இழிவானது மற்றொன்று இல்லை.

சாலமன் பாப்பையா உரை

பசுவிற்குத் தண்ணீர் வேண்டும் என்று பிறரிடம் பிச்சையாகக் கேட்டாலும் அதுவும் பிச்சையாதலால், நம் நாவிற்கு அதைவிடக் கேவலம் வேறு இல்லை.

மு. கருணாநிதி உரை

தாகம் கொண்டு தவிக்கும் பசுவுக்காகத் தண்ணீர் வேண்டுமென இரந்து கேட்டாலும்கூட, அப்படிக் கேட்கும் நாவுக்கு, அதைவிட இழிவானது வேறொன்றுமில்லை

இரவச்சம் அதிகாரம் முழுவதும்