குறள்: 1067 107. இரவச்சம்

பொருட்பால்குடியியல்

இரப்பான் இரப்பாரை எல்லாம் இரப்பிற்கரப்பார் இரவன்மின் என்று

மு. வரதராசனார் உரை

இரந்து கேட்பதனால் உள்ளதை ஒளிப்பவரிடத்தில் சென்று இரக்க வேண்டுடாம் என்று இரப்பவர் எல்லோரையும் இரந்து வேண்டுகின்றேன்.

சாலமன் பாப்பையா உரை

பிச்சை எடுத்துத்தான் ஆகவேண்டும் என்றால், தம்மிடம் இருப்பதை மறைப்பாரிடம் பிச்சை எடுக்க வேண்டா என்று, பிச்சை எடுப்பவரிடம் எல்லாம் நாம் பிச்சை கேட்கின்றேன்.

மு. கருணாநிதி உரை

கையில் உள்ளதை மறைத்து இல்லை என்போரிடம் கையேந்த வேண்டாமென்று கையேந்துபவர்களையெல்லாம் கையேந்திக்கேட்டு கொள்கிறேன்

இரவச்சம் அதிகாரம் முழுவதும்