குறள்: 1327 133. ஊடலுவகை
ஊடலின் தோற்றவர் வென்றார் அதுமன்னும்கூடலிற் காணப் படும்
மு. வரதராசனார் உரை
ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த உண்மை,ஊடல் முடிந்த பின் கூடிமகிழும் நிலையில் காணப்படும்.
சாலமன் பாப்பையா உரை
ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவார்; அந்த வெற்றியைக் கூடிப் பெறும் இன்பத்தில் அறியலாம்.
மு. கருணாநிதி உரை
ஊடல் என்கிற இனிய போரில் தோற்றவர்தான் வெற்றி பெற்றவராவார் இந்த உண்மை ஊடல் முடிந்து கூடிமகிழும் போது உணரப்படும்