குறள்: 1328 133. ஊடலுவகை

காமத்துப்பால்கற்பியல்

ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்கூடலில் தோன்றிய உப்பு

மு. வரதராசனார் உரை

நெற்றி வியர்க்கும் படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை ஊடியிருந்து உணர்வதன் பயனாக இனியும் பெறுவோமோ.

சாலமன் பாப்பையா உரை

நெற்றி வியர்க்கும்படி கலவியில் தோன்றும் சுகத்தை இன்னுமொரு முறை இவளுடன் ஊடிப் பெறுவோமா?

மு. கருணாநிதி உரை

நெற்றியில் வியர்வை அரும்பிடக் கூடுவதால் ஏற்படும் இன்பத்தை, மீண்டும் ஒருமுறை ஊடல் தோன்றினால், அதன் வாயிலாகப் பெற முடியுமல்லவா?

ஊடலுவகை அதிகாரம் முழுவதும்