குறள்: 163 17. அழுக்காறாமை

அறத்துப்பால்இல்லறவியல்

அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்பேணா தழுக்கறுப் பான்

மு. வரதராசனார் உரை

தனக்கு அறமும் ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத் தக்கவனே, பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமல் அதற்காகப் பொறாமைப்படுவான்.

சாலமன் பாப்பையா உரை

பிறர் உயர்வு கண்டு மகிழாமல் பொறாமைப்படுபவன், அறத்தால் வரும் புண்ணியத்தை வேண்டா என மறுப்பவன் ஆவான்

மு. கருணாநிதி உரை

அறநெறியையும், ஆக்கத்தையும் விரும்பிப் போற்றாதவன்தான், பிறர் பெருமையைப் போற்றாமல் பொறாமைக் களஞ்சியமாக விளங்குவான்

அழுக்காறாமை அதிகாரம் முழுவதும்