குறள்: 164 17. அழுக்காறாமை

அறத்துப்பால்இல்லறவியல்

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்ஏதம் படுபாக் கறிந்து

மு. வரதராசனார் உரை

பொறாமைப்படுதலாகிய தவறான நெறியில் துன்பம் ஏற்படுத‌ை அறிந்து, பொறாமை காரணமாக அறமல்லாதவைகளைச் செய்யார் அறிவுடையோர்.

சாலமன் பாப்பையா உரை

பொறாமை கொண்டால் துன்பம் வரும் என்பதை அறிந்து அறிவுடையோர் பொறாமை காரணமாகத் தீமைகளைச் செய்யமாட்டார்

மு. கருணாநிதி உரை

தீய வழியில் சென்றால் துன்பம் ஏற்படுமென்பதை அறிந்தவர்கள் பொறாமையினால் தீச்செயல்களில் ஈடுபடமாட்டார்கள்

அழுக்காறாமை அதிகாரம் முழுவதும்