குறள்: 165 17. அழுக்காறாமை
அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார்வழுக்கியுங் கேடீன் பது
மு. வரதராசனார் உரை
பொறாமை உடையவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது கேட்டைத் தருவது அது.
சாலமன் பாப்பையா உரை
பொறாமை உடையவர்க்குத் தீமை தரப் பகைவர் வேண்டியதில்லை; பொறாமையே போதும்
மு. கருணாநிதி உரை
பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்