குறள்: 214 22. ஒப்புரவறிதல்

அறத்துப்பால்இல்லறவியல்

ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்செத்தாருள் வைக்கப் படும்

மு. வரதராசனார் உரை

ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான், மற்றவன் செத்தவருள் சேர்த்துக் கருதப்படுவான்.

சாலமன் பாப்பையா உரை

உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவுபவனே உயிரோடு வாழ்பவன். உதவாதவன் இருந்தாலும் இறந்தவனாகவே எண்ணப்படுவான்.

மு. கருணாநிதி உரை

ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக் கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்; அதற்கு மாறானவன் இறந்தவனே ஆவான்

ஒப்புரவறிதல் அதிகாரம் முழுவதும்