குறள்: 215 22. ஒப்புரவறிதல்

அறத்துப்பால்இல்லறவியல்

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்பேரறி வாளன் திரு

மு. வரதராசனார் உரை

ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம் நீரால் நிறைந்தாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை

உலகின் வளர்ச்சிப் போக்கை அறிந்து செயற்படும் பேர் அறிவாளனின் செல்வம், நீர் நிறைந்த ஊருணி எல்லார்க்கும் பொதுவாவது போல் பொதுவாகும்.

மு. கருணாநிதி உரை

பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும்

ஒப்புரவறிதல் அதிகாரம் முழுவதும்