குறள்: 248 25. அருளுடைமை

அறத்துப்பால்துறவறவியல்

பொருளற்றார் பூப்ப ரொருகால் அருளற்றார்அற்றார்மற் றாதல் அரிது

மு. வரதராசனார் உரை

பொருள் இல்லாதவர் ஒரு காலத்தில் வளம் பெற்று விளங்குவர், அருள் இல்லாதவர் வாழ்க்கையின் பயம் அற்றவரே அவர் ஒரு காலத்திலும் சிறந்து விளங்குதல் இல்லை.

சாலமன் பாப்பையா உரை

பொருள் இல்லாமல் ஏழையாய்ப் போனவர் திரும்பவும் செல்வத்தால் பொலிவு பெறலாம்; அருள் இல்லாமல் போனவரோ, போனவர்தாம்; மீண்டும் அருள் உள்ளவராய் ஆவது கடினம்.

மு. கருணாநிதி உரை

பொருளை இழந்தவர் அதனை மீண்டும் தேடிப் பெறலாம் அருளை இழந்தால் இழந்ததுதான்; மீண்டும் பெற இயலாது

அருளுடைமை அதிகாரம் முழுவதும்