குறள்: 249 25. அருளுடைமை

அறத்துப்பால்துறவறவியல்

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்அருளாதான் செய்யும் அறம்

மு. வரதராசனார் உரை

அருள் மேற்கொள்ளாதவன் செய்கின்ற அறச்செயலை ஆராய்ந்தால், அஃது அறிவு தெளியாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை

மனத்துள் அருள் இல்லாதவன் செய்யும் அறத்தை ஆராய்ந்து பார்த்தால், ஞானம் இல்லாதவன் மெய்ப்பொருளை உணர்ந்தது போல ஆகும்.

மு. கருணாநிதி உரை

அறிவுத் தெளிவு இல்லாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டறிய முடியுமா? அது போலத்தான் அருள் இல்லாதவன் செய்யும் அறச்செயலும் இருக்கும்

அருளுடைமை அதிகாரம் முழுவதும்