குறள்: 427 43. அறிவுடைமை
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்அஃதறி கல்லா தவர்
மு. வரதராசனார் உரை
அறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார், அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்.
சாலமன் பாப்பையா உரை
அறிவுடையார் நாளை வர இருப்பதை முன் அறிய வல்லவர்; அறிவு இல்லாதவரோ அதனை அறிய இயலாதவர்.
மு. கருணாநிதி உரை
ஒரு விளைவுக்கு எதிர் விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்